டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி செல்லும் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விலையும் குறைந்தால் மட்டுமே முழுமையான டிஜிட்டல் சேவை பூர்த்தியாகும் என்று கூகுள் CEO சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

கராக்பூரில் உள்ள ஐஐடி-யில் “எதிர்காலத்திற்காக ஒரு பின்னோக்கிய பயணம்” என்ற தலைப்பில் பேசியபோது, ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்தால் உலக அளவில் டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியா முன்னேறிச் செல்லும் என்று கூறினார்.

இந்தியாவில் தற்போது ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 200 மில்லியன் ஆக உள்ளது. அவரவருக்கு தெரிந்த உள்ளூர் மொழிகளுக்கு ஏற்ப ஸ்மார்ட்போன்களை திருத்தியமைப்பதோடு இன்டர்நெட் சேவைகளின் தரத்தை மேம்படுத்தினால் அனைவருக்கும் டிஜிட்டல் சேவை திட்டம் வெற்றியடையும்.தற்போது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் கூகுள் நிறுவனம் பல திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறது என்றார்.

ஐஐடி மாணவர்களிடம் அவர் பேசும்போது உங்களுக்கு பிடித்தமானதை செய்யுங்கள். வெற்றி பெரும் வரை முயற்சி செய்யுங்கள் என்று அறிவுரைகளை வழங்கினார்.