சென்னை: இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.இதில் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு சசிகலா உடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இதில் மாநில சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் அன்வர்ராஜா எம்.பி , தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.மணிகண்டன், மாநில மகளிர் பிரிவு து.செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் எம்.எஸ்.தர்வேஸ், முன்னாள் அமைச்சர் சுந்தரராஜ், மாவட்ட அவைத்தலைவர் செ.முருகேசன்,பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.முத்தையா, மகளிர் பிரிவு சௌந்தரவள்ளி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் சசிகலா வை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.