தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த தொண்டர்களுடன் கலந்துரையாடுவது, போட்டோ எடுப்பது என தொண்டர்களை குஷிப்படுத்த ஆரம்பித்துவிட்டார். தற்போது தர்மபுரியில் உங்களுடன் நான் என்னும் நிகழ்ச்சி மூலம் தொண்டர்களை சந்திக்க ஆரம்பித்திருக்கிறார் விஜயகாந்த். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தேமுதிக தனது தொண்டர்களை ஊக்குவிப்பதற்காக இந்த ஏற்பாட்டினை செய்திருக்கிறது.

இதுமட்டுமல்லாமல் பிரேமலதா விஜயகாந்த் அவர்களும் தனது பங்கிற்கு தானும் நிர்வாகிகளை சந்திக்கப்போதாக கூறியிருப்பதாகவும் தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதாவிற்கு பிறகு தமிழகத்தில் அவரை போல திறமையாக தைரியமாக பேசக்கூடிய பெண்மணியாக திகழ்பவர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்.

மகம் நட்சத்திரம், சிம்மராசி என ஜெயலலிதாவின் அனைத்து ராசி பலன்களோடும் ஒத்துப்போகிறது பிரேமலதாவின் கிரகபலன். எனவே தமிழகத்தை ஜெயலலிதாவிற்கு பிறகு அவரைப் போன்ற பேச்சாற்றலும், துணிச்சலும் மிக்க பெண்மணிதான் ஆளவேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். தேமுதிக-வினரும் விஜயகாந்த் அவர்களின் ஆலோசனைகளை கேட்டுவிட்டு அண்ணியார் அவர்கள் களத்தில் இறங்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.இந்த நிலையில் பிரேமலதா தொண்டர்களை சந்தித்து ஆலோசனைகளை வழங்க உள்ளார் என்ற தகவலால் தேமுதிக தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும், வேகத்துடனும் காணப்படுகின்றனர்.