மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக தான் வரவேண்டுமென்பது அனைவரின் ஆசை என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

சென்னை டி.நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த தீபா அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்களை தான் சந்திக்கவில்லை என்றும் தெரிவித்தார். ஜெயலலிதாவின் புகழை காப்பாற்றும் கடமை தனக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய கட்சி தொடங்குவது பற்றி விரைவில் அறிவிப்பதாகவும், அரசியல் நிலைமையை உன்னிப்பாக கவனிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.