புதிதாக ரிலீஸ் ஆகும் திரைப்படங்களில் ஒன்று விஜய் நடிக்கும் பைரவா. இது சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கும் திரைப்படமாக கருதப்படுகிறது. இந்த திரைப்படம் உலகில் 55 நாடுகளில் திரையிடப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் “பைரவா”. இது இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. வரும் 12 ந்தேதி தமிழகத்தில் மட்டும் சுமார் 450 தியேட்டர்களில் வெளியாகிறது. ஒரே நாளில் இவ்வளவு தியேட்டர்களில் வெளியாவதால் கபாலி படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜன.11 ம் தேதியே வெளிநாடுகளில் அதாவது சுமார் 55 நாடுகளில் திரையிடப்படுகிறது. இதன் மூலம் “பைரவா” படம் தமிழ் சினிமா ஒன்று அதிக நாடுகளில் வெளியாகும் திரைப்படம் என்ற சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் உற்சாகமாக பேசப்படுகிறது.