ஜெயலலிதா மறைவுக்கு விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் சுதீஷ் ஆகியோர் ராஜாஜி ஹாலில் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். சமீபத்தில் விஜயகாந்த் தே.மு.தி.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி முக்கிய ஆலேசனை நடத்தினார். இதில் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சசிகலாவும் விஜயகாந்தும் ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.